PAN (Permanent Account Number) ஒரு அடையாள அட்டை மட்டுமல்ல; இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடித்தளமாகவும், தினசரி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய கருவியாகவும் திகழ்கிறது. இப்போது, Cabinet Committee on Economic Affairs (CCEA), Income Tax Department-ஐ PAN 2.0 Project க்கான ஒப்புதலுடன், PAN சேவைகளின் புதிய கட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, இது பன்முகப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்க வல்லதாக இருக்கும்.
PAN 2.0 யின் அவசியம்
தற்போது, PAN சேவைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
eFiling Portal
UTIITSL Portal
Protean e-Gov Portal
PAN 2.0, இந்த மூன்று சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஒற்றை போர்டல் மூலம் செயல்படுத்துகிறது. இது பயனர்களுக்கு விண்ணப்பம், புதுப்பித்தல், Aadhaar-PAN Linking, திருத்தங்கள், மற்றும் Online PAN Validationபோன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் பெற உதவுகிறது.
PAN 2.0 இன் முக்கிய அம்சங்கள்
Unified Portal for PAN/TAN Services:
PAN மற்றும் TAN தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கான ஒரே தளம்.
Paperless, Eco-Friendly Process:
100% டிஜிட்டல் செயல்முறை மற்றும் e-PAN ஐ பதிவுசெய்யப்பட்ட Email-க்கு அனுப்புதல்.
Free Services:
அனைத்து PAN/TAN சேவைகளும் இலவசம்; இந்தியாவில் Physical PAN Card-க்கு ₹50 கட்டணம் மட்டுமே.
Enhanced Data Security: PAN Data Vault போன்ற பாதுகாப்பு முறைமைகள் மூலம் தகவல் பாதுகாப்பு.
24/7 Support:
உதவிக்கான Dedicated Helpdesk மற்றும் Call Center.
PAN 2.0 மூலம் பெறப்படும் நன்மைகள்
Integrated Technology:
மூன்று போர்டல்களின் சேவைகளையும் ஒருங்கிணைத்து seamless user experience.
Faster Processing:
பான் எளிதாகவும் வேகமாகவும் பிறப்பிக்கப்படுகிறது மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
QR Code Verification:
புதிய QR Code வசதிகள் மூலம், பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை உறுதிப்படுத்துதல்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
1. PAN 2.0-க்கு நExisting PAN Holders மறுபடியும் PAN பெற வேண்டுமா?
இல்லை. தற்போதைய PAN தொடர்ச்சியாக பயன்படுத்தப்படலாம்.
2. பெயர் அல்லது முகவரி திருத்தங்களை செய்ய முடியுமா?
ஆம். PAN 2.0 அறிமுகமானதும் இலவசமாக திருத்தங்கள் செய்யலாம்.
3. Duplicate PAN ஐ எப்படி கையாள்வார்கள்?
புதிய சிஸ்டம், Duplicate PAN-களை கண்டறிந்து சரிசெய்யும் சிறப்பு முறைமைகளை கொண்டுள்ளது.
4. QR Code இல்லாமல் பழைய PAN கார்டுகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிய QR Code PAN அட்டைகளுக்கான விண்ணப்பம் தேவையானால் செய்யலாம், ஆனால் இது கட்டாயமல்ல.
5. "Common Business Identifier" என்றால் என்ன? Union Budget 2023ன் கீழ், பான், குறிப்பிட்ட துறைகளில் Universal Identifier ஆக செயல்படும்.
PAN 2.0 மூலம் இந்தியாவின் வரி சேவைகள் எளிமையானதோடு, பாதுகாப்பானதாகவும் மாறும். ஒருங்கிணைந்த போர்டல், வேகமான செயல்பாடு மற்றும் அதிக பாதுகாப்பு வசதிகளால், இது ஒரு பெரிய புரட்சியாக இருக்கும்.
தொடர்ந்து PAN 2.0 Updates-ஐ தெரிந்து கொள்ள AuditorSaab.com-ல் தொடர்பில் இருங்கள் – உங்கள் நம்பகமான நிதி உதவி.